ஜனாதிபதி புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார்

ஜனாதிபதி புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார்
  • :
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, 'AI Impact Summit 2026' மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (17) பிற்பகல் புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.

 விமான நிலையத்தைச் சென்றடைந்த ஜனாதிபதியை இந்திய மத்திய இணை அமைச்சர் ஸ்ரீ ராஜ் பூஷன் சௌதரி (Shri Raj Bhushan Choudhary) உள்ளிட்ட குழுவினரால் அமோகமாக வரவேற்பளிக்கப்பட்டது.

செயற்கை நுண்ணறிவை மனிதகுலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட AI Impact Summit 2026 மாநாடு புதுடெல்லியில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் 19ஆம் திகதி மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.
 
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளையும் நடத்தவுள்ளார்.
டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஹான்ஸ் விஜேசுரிய மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால ஆகியோரும் ஜனாதிபதியுடன் இம்மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.

Related Articles