ரூ. 270 மில்லியனுக்கும் அதிகமான செலவில் அபிவிருத்தி செய்யப்பட்ட பதுளை மாவட்டத்தின் எல்ல பிரதேசத்தில் உள்ள 3.3 கி.மீ நீளமுள்ள அம்பகமுவ - கந்தேகும்புர வீதி, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன,
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவான் செனரத், சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, ஊவா மாகாண ஆளுநர் கபில யசேகர, ஊவா மாகாண பிரதம செயலாளர் அனுஷா கோகுல மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகளின் பங்கேற்புடன் நேற்று (18) திறந்து வைக்கப்பட்டது.


