கைவிடப்பட்ட ஹிங்குராக்கொட சதொச நெல் களஞ்சியசாலையை உடனடியாக புனரமைக்குமாறு வர்த்தக அமைச்சர் பணிப்புரை

கைவிடப்பட்ட ஹிங்குராக்கொட சதொச நெல் களஞ்சியசாலையை உடனடியாக புனரமைக்குமாறு வர்த்தக அமைச்சர் பணிப்புரை
  • :

எதிர்வரும் பெரும்போக விளைச்சலை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்துவதற்காக, பல வருடங்களாக கைவிடப்பட்ட ஹிகுராங்கொட சதொச நெல் களஞ்சியசாலையை, நவீனமயப்படுத்தி உடனடியாக புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

அண்மையில் ஹிங்குராக்கொட நெல் களஞ்சியசாலையை பார்வையிடும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவலித்துள்ளார்.

இந்த களஞ்சியசாலையை சரிசெய்து மீண்டும் பயன்படுத்துவதற்காக, தன்னார்வு தொண்டு நிறுவனம் ஒன்று இதன்போது இணக்கம் தெரிவித்துள்ளது.

மெந்திரிகிரிய தானிய பாதுகாப்பு மையம் மற்றும் களஞ்சியசாலையை ஆய்வு செய்வதற்காக அமைச்சர் மற்றும் அவரது குழுவினரும் இதன்போது பங்கேற்றிருந்தனர். 3000 மெற்றிக் தொன் கொள்ளளவு கொண்ட இந்த தானிய களஞ்சியசாலையை சரியான முறையில் பயன்படுத்துவதற்கும் எதிர்காலத்தில் அதிக பயிர்களை சேமித்து வைப்பதற்கும் உரிய வழிமுறைகளை தயார் செய்யுமாறு அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]