கிறிஸ்மஸ் மற்றும் பாடசாலை விடுமுறை நாட்களைக் கழிப்பதற்காக, இந்த நாட்களில் நுவரெலியா பிரதேசத்திற்கு அதிகளவான உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாக நுவரெலியா மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது நுவரெலியா நகரைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்களான விக்டோரியா பூங்கா, கிரிகேரி ஏரி போன்ற இடங்கள் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிகின்றன.
இந்த நாட்களில் காணப்படும் சீரான காலநிலை காரணமாக, நுவரெலியா பிரதேசத்திற்கு அதிகளவான உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக மாவட்ட ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.