சிகிரியாவில் பாதுகாப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தி சுற்றுலா பாதுகாப்பை அதிகரிப்பதற்காக கொரிய சர்வதேச ஒத்துழைப்புக்கான நிறுவனம் (KOICA) விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு யோசனை முன் வைத்துள்ளது.
இங்கு தொல்பொருளியல் திணைக்களத்தின் முழுமையான அனுமதியுடன் மத்திய கலாசார நிதியத்தின் மேற்பார்வையின் கீழ் உத்தேச வேலைத்திட்டத்தின் ஊடாக சீகிரியக் குன்றுக்கு செல்லும் பாதை, மாற்றுப் பாதை நிர்மாணித்தல் மற்றும் சிகிரிய நூதனசாலை, சிற்றுண்டிச்சாலை மற்றும் அனுமதிச் சீட்டு மேசை ஆகியவற்றை அபிவிருத்தி செய்தல் போன்றவற்றிற்காக உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 2.4 பில்லியன் ரூபாய் பெறுமதியான திட்டத்திற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் ஆலோசனைக்கு இணங்க மத்திய கலாசார நிதியம் மற்றும் கொரிய சர்வதேச ஒத்துழைப்புக்கான நிறுவனம் (KOlCA) என்பவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்து இடுவதற்கு இதன்போது உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் அண்மையில்(27) புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி தலைமையில் அமைச்சில் இடம்பெற்றது.
இதற்கு கொரிய சர்வதேச ஒத்துழைப்புக்கான நிறுவனத்தைப் (KOlCA) பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளூர் பணிப்பாளர் யுங்ஜின் கிம் (Myungjin Kim) மற்றும் அமைச்சின் செயலாளர் ஏ. எம். பி. எம். பி. அதப்பத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாத்தளை மாவட்ட ஊடகப் பிரிவு