கழிவுகளை ஏற்றிச் செல்வதற்காக பாவிக்கப்படும் Garbage Compactors கொள்வனவு செய்வதற்காக முந்நூறு மில்லியன் ஜப்பானிய யென் நிதிக்கொடையை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
நேற்று (27.01.2025) நடைபெற்ற அமைச்சரவையில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது
Clean Sri Lanka நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கையை தூய்மையான, பேண்தகு மற்றும் சுற்றாடல் பொறுப்புள்ள முன்மாதிரியாக மாற்றம் செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்குத் தேவையான மேம்பட்ட கழிவு முகாமைத்துவ உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாதிருத்தல் மேற்குறித்த நோக்கை அடைவதற்கான பிரதான தடையாக அடையாளம் காணப்பட்டள்ளது.
இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு அமைய ஜப்பானிய அரசினால் 300 மில்லியன் யென் நிதிக்கொடை வழங்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மேற்குறித்த நிதி மேல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ளூராட்சி நிறுவனங்களின் கழிவு முகாமைத்துவ ஆற்றலை அதிகரிப்பதற்காக 28 Garbage Compactors கொள்வனவு செய்வதற்காக பாவிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த கருத்திட்டம் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேற்பார்வையில் அமுப்படுத்தப்படுவது. மேற்குறித்த கருத்திட்டத்தின் கீழ் மேல் மாகாணத்துக்கு 14, கிழக்கு மாகாணத்துக்கு 8, வடக்கு மாகாணத்துக்கு 6 என்றவாறு Garbage Compactors பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.