கல்பிட்டி கடற்கரையில் போதைப்பொருள் நிறைந்த படகு பொலிஸாரினால் பறிமுதல்

கல்பிட்டி கடற்கரையில் போதைப்பொருள் நிறைந்த படகு பொலிஸாரினால் பறிமுதல்
  • :

2025.12.05 ஆம் திகதி இரவு, கல்பிட்டி கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான படகொன்றை கடற்படை அதிகாரிகள் பரிசோதித்ததில், 03 உரப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 63 கிலோ 718 கிராம் ஐஸ் போதைப்பொருட்கள் மற்றும் 14 கிலோ 802 கிராம் ஹெரோயின் என்பன பறிமுதல் செய்யப்பட்டு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் கொண்டு சென்ற படகின் உரிமையாளர் கல்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவரைக் கைது செய்வதற்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles