தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் ஊடாக கம்பஹா மாவட்டத்தில் டெங்கு கட்டுப்பாட்டு திட்டம் கம்பஹா மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சுகாதார சேவைகள் அதிகாரி பிரிவு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு ஜூலை மாதம் 03, 04 மற்றும் 05 ஆகிய திகதிகளில் நடைபெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது கம்பஹா மாவட்டத்தில் 4279 நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன் அது இலங்கையின் மொத்த சனத்தொகையில் 14.9 % வீதமாகும்.
அதன்படி கம்பஹா, மீரிகம, பியகம, அத்தனகல்ல, திவுலபிடிய, மினுவான்கொட, தொம்பே , ஜா எல, களனி, நீர்கொழும்பு, ராகம, வத்தளை , மஹர, போன்ற பிரதேச சுகாதார சேவைகள் அதிகாரி பிரிவில் 13 பிரிவுகளில் இந்த டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டம் அமுல் படுத்தப்படுவதுடன் அங்குள்ள வீடுகள், அரச நிறுவனங்கள், பாடசாலைகள், சமய நிறுவனங்கள், கைத்தொழில் வளாகங்கள் போன்றவை கிராம சேவகர் பிரிவு ரீதியாக சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
கம்பஹா மாவட்ட ஊடகப்பிரிவு


