பதுளை மாவட்டம் முழுவதும் சேதமடைந்த 1020 நீர்ப்பாசன அமைப்புக்களை மறுசீரமைத்து பெரும்போகத்திற்கு நீர் வழங்கும் மாபெரும் சிரமதான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சேதமடைந்த கண்டகெட்டிய பதுலு ஓயா நீர்ப்பாசன அமைப்பை மறுசீரமைக்கும் பணி நேற்று (12) தேசிய பிக்கு முன்னணியின் ஹம்பாந்தோட்டை, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் பதுளை மாவட்டங்களைச் சேர்ந்த நாற்பது பெளத துறவிகள், சிவில் பாதுகாப்புத் திணைக்கள உறுப்பினர்கள், உள்ளூர் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேசவாசிகளால் மேற்கொள்ளப்பட்டது.
பதுளை மாவட்டத்தின் கண்டகெட்டிய பகுதியில் உள்ள மூன்று முக்கிய நீர்ப்பாசன திட்டங்களில், பதுலு ஓயா திட்டம் 1,750 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் சுமார் 50 குடும்பங்கள் அங்கு வாழ்கின்றன. இந்த இலட்சிய திட்டத்தின் நோக்கம், இந்த சேதமடைந்த கால்வாய்களை 14 நாட்களுக்குள் புதுப்பித்து பெரும்போகத்திற்கு தண்ணீர் வழங்குவதும் விவசாயத்தை மேம்படுத்துவதுமாகும்.


