கண்டி யாழ்ப்பாண வீதியின் (A-009) மஹய்யாவ சுரங்கப் பாலத்தை அமைப்பதற்கான ஒப்பந்தம்
கண்டி யாழ்ப்பாண வீதியின் (A-009) மஹய்யாவ புகையிரத வீதிக்குக் கீழே கொங்கிறீட் சுரங்கப் பாலமொன்றை அமைப்பதற்கு தேசிய போட்டி விலைமுறி முறையின் கீழ் விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன.
அதற்காக 03 விலைமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. குறித்த விலைமனுக்கள் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர், உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவால் வழங்கப்பட்டுள்ள விதந்துரையின் அடிப்படையில் இவ்வொப்பந்தத்தை M/s, NEM Construction (Pvt) Ltd 5 699.58 மில்லியன் (வரி இல்லாமல்) ரூபாய் தொகைக்கு வழங்குவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


