கதிர்காம நகரம் நாட்டின் முக்கிய நகரமாக மாற்றப்படும் - வர்த்தக, வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன
கதிர்காம நகர அபிவிருத்தி திட்டத்தை உருவாக்கி, கதிர்காம நகரத்தை நாட்டின் முக்கிய நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக, வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன தெரிவித்தார்.
மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் அண்மையில் இருதய நோய் சிகிச்சைப் பிரிவை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
பொத்துவில், பிபில, வெல்லவாய, தனமல்வில மற்றும் பல சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஏராளமான மக்களுக்கு மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனை சிகிச்சை சேவைகளை வழங்குவதாக குறிப்பிட்ட அமைச்சர், மருத்துவமனைக்கு அருகில் உள்ள 22 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த 2006 முதல் நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், அதனை செய்ய முடியவில்லை என்றும், புதிய அரசாங்கத்தின் கீழ் அந்த நிலத்தை விரைவில் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து, மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையை எதிர்காலத்தில் முறையாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.