கதிர்காம நகரின் சுற்றுலா ஈர்ப்பை மேம்படுத்த 'CITY BRANDING' திட்டத்தின் கீழ் புதிய அபிவிருத்தி நடவடிக்கைகள்

கதிர்காம நகரின் சுற்றுலா ஈர்ப்பை மேம்படுத்த 'CITY BRANDING' திட்டத்தின் கீழ் புதிய அபிவிருத்தி நடவடிக்கைகள்
  • :
நகர அபிவிருத்தியின் கீழ் முன்னெடுக்கப்படும் 'CITY BRANDING' செயற்திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் நான்கு நகரங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த 6 ஆம் திகதி கதிர்காம நகரத்தை மையமாகக் கொண்ட வர்த்தக நாமப்படுத்தல் (Branding) குறித்த கலந்துரையாடல் கதிர்காம பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

 இதன்போது கதிர்காம நகரின் தனித்துவமான சிறப்பம்சங்கள் குறித்தும், அதன் அடிப்படையில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக 'CITY BRANDING' திட்டத்தின் கீழ் எடுக்கப்பட வேண்டிய புதிய அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

Related Articles