போக்குவரத்து பாதுகாப்பிற்காக நடமாடும் போதைப்பொருள் சோதனை சேவையை வெளி மாகாணங்களுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை

போக்குவரத்து பாதுகாப்பிற்காக நடமாடும் போதைப்பொருள் சோதனை சேவையை வெளி மாகாணங்களுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை
  • :
போக்குவரத்து பாதுகாப்பிற்காக நடமாடும் போதைப்பொருள் சோதனை சேவையை வெளி மாகாணங்களுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை

 இந்நாட்டு போக்குவரத்து பாதுகாப்பிற்காக சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் போதைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளார்களா எனச் சோதனையிட்டு சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள நடமாடும் போதைப்பொருள் சோதனை வேலைத்திட்டத்தை (Mobile Drug Testing Program) முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் கிளிபர்ட் பெரேரா (Clifford Perera) தெரிவித்தார்.

பொதுப் போக்குவரத்து பாதுகாப்பிற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் கட்டமைப்பினால் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு வேலைத்திட்டம் தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று (08) கலந்துகொண்ட போதே தலைவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பு பத்தரமுல்ல, கொஸ்வத்த, 'மகநெகும மகமெதுர' வின் 09 ஆவது மாடியில் அமைந்துள்ள போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் மண்டபத்தில் நடைபெற்றது.

Related Articles