கிழக்கு மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள்

கிழக்கு மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள்
  • :
ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கு அமைவாகவும், கிழக்கு மாகாண ஆளுநரின் வழிகாட்டுதலின் கீழ் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாணம் முழுவதும் விழிப்புணர்வு மற்றும் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 அதன் ஒரு பகுதியாக, டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் காணப்படும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை அகற்றி சுத்தப்படுத்தும் செயற்பாடுகள் மட்டக்களப்பு மாவட்டத்திலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு விமானப்படை முகாமின் கட்டளையிடும் பொறுப்பதிகாரி விங் கமாண்டர் பாலசூரிய அவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் (07) மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் இடம் பெற்றது.
விமானப்படை வீரர்களினால் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணியானது வாவிக்கரை வீதியின் இருபுறங்களிலும் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய வகையில் குவிந்து காணப்பட்ட குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பிற கழிவுப் பொருட்கள் அகற்றப்பட்டு, முழுப் பகுதியும் சுத்தப்படுத்தப்பட்டது.
இந்த சுத்திகரிப்பு நடவடிக்கையில் விமானப்படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் இணைந்து பங்கேற்று, சுற்றுச்சூழலை தூய்மையாகப் பேணுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வையும் பொதுமக்களிடையேனற.

Related Articles