நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டெங்கு நுளம்புகளின் பரவலை தடுப்பதற்காக நேற்று (08) பாணந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சுத்தப்படுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது விசேடமாக விமானப்படையின் ஒத்துழைப்புடன் பாணந்துறை நகர மத்தி மற்றும் சரிக்கா னமுல்லை, கோரக்கான பிரதேசங்களில் ட்ரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு டெங்கு நுளம்பு உருவாகக்கூடிய இடங்களை அடையாளம் காணும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அவ்வாறே டெங்கு பரவலை தடுப்பதற்காக பிரதேச மக்களைத் தெளிவுபடுத்தும் நிகழ்வு, சுத்தம் செய்யும் நிகழ்வு போன்றவை விஞ்ஞான பரிசோதனை சுகாதார வைத்திய அதிகாரிகளின் பங்களிப்புடன் இடம் பெற்றது


