கடும் மின்னல் தாக்கம் தொடர்பான ஆலோசனை

  • :
கடும் மின்னல் தாக்கம் தொடர்பான ஆலோசனை

 இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை நிலையத்தினால் வெளியிடப்பட்டது.

2026 ஏப்ரல் 07ஆம் திகதி பிற்பகல் 11.00 மணி வரையான காலப்பகுதிக்காக, 2026 ஏப்ரல் 07ஆம் திகதி பிற்பகல் 12.30 மணியில் வெளியிடப்பட்டது.
 
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கும் குருநாகல், அனுராதபுரம், மன்னார்,
வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும்
தயவுசெய்து அவதானமாக இருக்கவும்:
 
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் குருநாகல், அனுராதபுரம்,மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு கடும் மின்னல் தாக்கத்துடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர்
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை முன்னெச்சரிக்கை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
 
எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்:
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பொதுமக்கள் பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் ஆலோசனை வழங்குகின்றது.
உள்ளகப் பகுதிகளில் புகலிடம் தேடுங்கள். மரங்களின் கீழ் ஒருபோதும் நிற்க வேண்டாம்.
இடி முழக்கத்தின் போது நெல்வயல்கள், தேயிலைத் தோட்டங்கள், திறந்த நீர்நிலைகள் போன்றவற்றைத் தவிர்த்துக் கொள்ளவும்.

Related Articles