தற்போது இலங்கை தேயிலை சபையினால் 4,000/- ரூபா உர மானியம் பெற்றுவரும் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு, 50 கிலோ கிராம் உர மூட்டை ஒன்றிற்கு மேலதிகமாக 5,000/- ரூபா ஒருமுறை மட்டும் வழங்கப்படும் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
இதற்கமைய, தேயிலை மற்றும் நெற்செய்கைக்கான உர மானியத்தை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் இன்று (07) பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.


