கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று (23) நீர் விநியோகம் தடை. - தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை

கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று (23) நீர் விநியோகம் தடை. - தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை
  • :
 

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீர் பெறும் பிரதான நீர் உட்கொள்ளும் பம்பிங் நிலையத்திற்கான மின்சாரம் இன்று (23) நிறுத்தப்படுவதால், பல பகுதிகளுக்கு இன்று (23) காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

 அதன்படி, கொழும்பு 01 முதல் 15 வரை, பத்தரமுல்ல, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவதுகொட, கோட்டை, ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொட, நாவல, கொலன்னாவ, IDH, கொட்டிகாவத்த, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்த, மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்படும்.

 
நீர் விநியோகத் தடையால் நுகர்வோருக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருத்தம் தெரிவிப்பதோடு, முன்கூட்டியே தண்ணீரை சேமித்து வைக்குமாறும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles