கொழும்பு மாவட்ட விளையாட்டுத்துறையின் முற்போக்கு மீளாய்வு; எதிர்கால நடவடிக்கைகளுக்காக விசேட விளையாட்டு உபகுழு நியமனம்!
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் (16) கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ சுனில் குமார கமகே கலந்துகொண்டார்.
இதன்போது, 2026ஆம் ஆண்டிற்காக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக, மாவட்டத்தில் விளையாட்டுத்துறையை மிகவும் முறையானதாகவும் திறமையாகவும் முன்னோக்கி கொண்டு செல்வதற்காக "கொழும்பு மாவட்ட விளையாட்டு உபகுழு" நேற்று நியமிக்கப்பட்டதுடன், இந்த உபகுழுவின் ஊடாக எதிர்கால அபிவிருத்திப் பணிகளை மிகவும் திட்டமிட்ட முறையில் முன்னெடுப்பதற்கு அமைச்சும் எதிர்பார்க்கின்றது.


