கொழும்பு மாவட்டத்தில் நேர அட்டவணைக்கு அமைவாக நீர் விநியோகம் தடைப்படும்...

கொழும்பு மாவட்டத்தில் நேர அட்டவணைக்கு அமைவாக நீர் விநியோகம் தடைப்படும்...
  • :

கொழும்பு மாவட்டத்தில் நேர அட்டவணைக்கு அமைவாக நீர் விநியோகம் தடைப்படும்...

தற்போது நிலவும் உலர் காலநிலை காரணமாக நீர் பாவனையாளர்கள் அசௌகரியம் அடைவதைத் தவிர்ப்பதற்காக மற்றும் அன்றாட ம் நீண்ட நேரம் நீர் விநியோகம் தடைப்படுவதை தவிர்ப்பதற்காகவும் நீர் முகாமைத்துவம் மேற்கொள்ளப்பட்டு விநியோகிப்பதற்கு நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையில் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்தல் ஒன்றை விடுத்து இது தொடர்பாகத் தெரிவித்துள்ளது.

அதன்படி நேர அட்டவனுக்கு நீர் வழங்குவதற்காக அச்சபை தீர்மானித்துள்ளதுடன் இந்த மாதம் பத்தாம் திகதி வரை கொழும்பு மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கு இந்த நேர அட்டவணைக்கு அமைவாக நீர் விநியோகம் தடைப்படும்.

அதன்படி நேற்று முதல் பத்தரமுல்லை , பாமன் கடை, வெள்ளவத்தை மற்றும் நாவலையை சுற்றியுள்ள பிரதேசங்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 1.00 வரை மூன்று மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப் படுத்தப்படும்.

அவ்வாறே அதே வரிசையில் பாதுக்கை , ஹோமாகம, பெலவத்தை போன்ற பிரதேசங்களுக்காக நேற்று இரவு 8.00 மணி முதல் 24 மணித்தியாளங்களுக்கு நீர் விநியோகத்தை இடைநிறுத்தியதனால் மூன்று நாட்களுக்கு நீர் விநியோகம் வழங்கப்படும் என அச்சபை தெரிவித்துள்ளது.

நீர் விநியோகத் தடை தொடர்பான மேலதிக தகவல்களை 1939 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து பெற்றுக் கொள்ள முடியும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles