கொழும்பு 7 டோரிங்டன் தொடர்மாடி குடியிருப்பு வளாகத்தின் நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ள நிலைமைகளை நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர கண்காணிப்பதற்கான விஜயமொன்றை நேற்று முன்தினம் (03) மேற்கொண்டார்.
2014 இல் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது நிறைவடைந்த அந்த இடத்தைப் பார்வையிட்டதுடன், அங்கீகரிக்கப்பட்ட 1.2 பில்லியன் நிதி ஒதுக்கீட்டைச் செலவழித்து, 115 வீட்டு அலகுகளைக் கொண்டதாக இந்தத் திட்டம், மீண்டும் நிருமாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நிறைவடைந்துள்ளன.
தற்போது இந்தப் பகுதியில் வசிக்கும் மக்களை மீள்குடியேற்றம் செய்யும் நோக்கில், இதை விரைவில் பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் பிரதி அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.


