வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த நிவாரணம் உட்பட அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காக, நாடு முழுவதும் உள்ளடக்கும் வகையில் ஒரு விசேட வேலைத்திட்டத்தை கடற்படை நடைமுறைப்படுத்தியுள்ளது.
அதன் கீழ், கொத்மலை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ரம்பொடகலை, பாளுவத்தை மற்றும் பனன்கம்மன ஆகிய கிராமங்களில் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக, அவற்றைக் கொத்மலை நீர்த்தேக்கம் வழியாக கொண்டு செல்ல கடற்படை இன்று (2025 டிசம்பர் 04) தனது பங்களிப்பை வழங்கியது.
அதன்படி, சீரற்ற வானிலை காரணமாக கனமழை மற்றும் மண் சரிவுகள் காரணமாக கொத்மலை; ரம்பொடகலை, பாளுவத்தை மற்றும் பனன்கம்மன ஆகிய கிராமங்களுக்கான பிரவேச வீதிகள் தடைப்பட்டதால், அக் கிராமங்களைச் சூழ வாழும் சுமார் 350 குடும்பங்களுக்குத் தேவையான உலர் உணவுகள் உட்பட அத்தியாவசியப் பொருட்களை கொத்மலை நீர்த்தேக்கம் ஊடாகக் கொண்டு செல்வதற்கு கடற்படை இவ்வாறு தனது பங்களிப்பை வழங்கியது.


