கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்திற்கு விஜயம் .

கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்திற்கு விஜயம் .
  • :
கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தை மேற்பார்வை செய்யும் விஜயமொன்றை கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க இன்று (25) மேற்கொண்டார்.

 பொருளாதார மத்திய நிலையத்தை வினைத்திறனாக செயற்படுத்துவது தொடர்பாக பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள் மற்றும் பொருளாதார மத்திய நிலைய பணிப்பாளர் சபை உறுப்பினர்களோடு கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.

விவசாய உற்பத்திகளை நேரடி சந்தைப்படுத்தும் அமைப்பை வலுப்படுத்துவதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும், நுகர்வோருக்கு தரமான பொருட்களை நியாயமான விலையில் வழங்குவதற்குரிய தீர்மானங்களை மேற்கொள்ளும் பொருட்டு நடைபெற்ற இக் கலந்துரையாடலின் நோக்கமானது கிளிநொச்சி மாவட்டத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கான ஒருங்கிணைந்த திட்டமிடலுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.
 
குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன்,அமைச்சின் அதிகாரிகள் கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன், திட்டமிடல் பணிப்பாளர்,பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், கரைச்சி பிரதேச சபை தவிசாளர், பொலிஸ் அதிகாரிகள், வர்த்தகர்கள், உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related Articles