திட்வா சூறாவளியால் சேதமடைந்த பதவிய, கெபிதிகொல்லாவ, ரம்பேவ, மஹாவிலச்சிய, நொச்சியாகம, தலாவ, ராஜாங்கனை, கல்னேவ, இபலோகம, திரப்பனே, பலுகஸ்வெவ, பலகல ஆகிய பிரிவுகளுக்குட்பட்ட வீடுகளின் கட்டுமானப் பணிகளின் முதல் கட்ட பணிகள் இடம்பெற்று வருவதாக அனுராதபுர மாவட்ட ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
அநுராதபுரம் மாவட்ட மேலதிக செயலாளர் சந்தியா அபேசேகர குறித்த வீடுகளின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.
பல பிரிவுகளில், முதல் கட்ட கட்டுமானப் பணிகள் உயர் மட்டத்தில் உள்ளன.
பகுதியளவில் சேமைடைந்த வீடுகள் தொடர்பான நிதி தற்போது சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு அனுப்பப்படுகின்றன.


