மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு 600 மில்லுயன் ரூபாய் பெறுமதியுள்ள ஐந்து மாடி சிறுவர் வார்டுகள்

  • :

 

 

 

இந்திரா டிரேடர்ஸ் குழுமத்தின் தலைவர் இந்திரா குமார சில்வாவின் முழு நிதியுதவியுடன் மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் கட்டப்படவுள்ள ஐந்து மாடி குழந்தைகள் வார்டு வளாகத்தின் அடிக்கல் நாட்டு விழா நேற்று (03) சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் நடைபெற்றது.

 

சுமார் 600 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள இந்த ஐந்து மாடி குழந்தைகள் வார்டு வளாகத்தில், 80 படுக்கைகள் கொண்ட இரண்டு குழந்தைகள் வார்டுகள், ஒரு குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் ஒரு குழந்தைகள் வெளிநோயாளர் கீமோதெரபி பிரிவு ஆகியவை அமையும்.

 

 

இலங்கை விமானப்படையின் ஒத்துழைப்பு பங்களிப்புடன் கட்டப்படும் இந்த குழந்தைகள் வார்டு வளாகம் ஒரு வருடத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வளாகத்தின் வடிவமைப்பும் நன்கொடையாக இலவசமாக செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பி

டத்தக்கது

Related Articles