புற்றுநோயாளர்களுக்கு அவசியமான சுகாதார உபகரணங்களை வழங்குவதில் அரசாங்கம் அதிக அக்கறையுடன் செயற்படுவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இந்திரா டிரேடர்ஸ் குழுமத்தின் தலைவர் இந்திர குமார சில்வாவின் பூரண நிதி அனுசரணையில் மகரகம அபேக்ஷா வைத்தியசாலையில் நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஐந்து மாடி சிறுவர் விடுதிக்கான கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் வைப்பவத்தின் போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே நேற்று (03) அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்; புற்றுநோய் அபேக்ஷா வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக லீனியர் எக்சலேட்டர் இயந்திரத்தை (linear accelerator) விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.
05 புதிய லீனியர் எக்சலேட்டர் இயந்திரங்களை (linear accelerator) பைத்தியசாலை கட்ட அமைப்பிற்கு கிடைக்க உள்ளதாகவும், ஆசி அபிவிருத்தி வங்கியின் ஊடாகவும் மேலும் லீனியர் எக்சலேட்டர் இயந்திரங்கள் (linear accelerator) இரண்டு அபிக்ஷா வைத்தியசாலைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதில் புற்றுநோயாளர்களின் சிகிச்சை சேவைகளுக்கு பாரிய நிவாரணங்கள் கிடைப்பதாகவும் அமைச்சர் இதன் போது தெளிவுப்படுத்தினார் .
புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் ஒவ்வொரு புற்று நோய்க்கும் மக்கள் உள்ளாவதை தடுப்பதற்காக சுகாதார அமைச்சு பல்வேறு முறைகளின் ஊடாக செயற்படுவதாகவும், இதற்காக சரியான திட்டம் ஒன்றாக புற்றுநோய் வைத்தியசாலையின் சமையலறையை தனியார் வைத்தியசாலையின் சமையலறை மட்டத்திற்கு அபிவிருத்தி செய்வதாகவும் அமைச்சர் விவரித்தார். நோயாளர்களை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுத் தொகுதி நோயாளர்களுக்கு வழங்குவதற்கு பதிலாக நோயாளர்களின் அவசியத்திற்கு இணங்க திருத்தம் செய்து நோயாளர்களுக்கு பொருத்தமான உணவுகளை வழங்குவதற்கு சரியான திட்டம் ஒன்று யோசனை தொடர்பான விசேட வைத்தியர்களின் பங்களிப்புடன் ஒவ்வொரு அபிக்ஷா வைத்தியசாலையிலும் ஆரம்பிக்க உள்ளதாகவும் அமைச்சர் மேலும் விபரித்தார்
.


