நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் கொண்ட குடும்ப அலகுகளுக்கு நிரந்தர வீடுகளை வழங்கும் திட்டமான "உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் 2025"
எனும் தேசிய வீட்டுத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு குடும்ப அலகுகளுக்கு நிரந்தர வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி. சரத் தலைமையில் நவோதகம மற்றும் எவெத்கல்ல கிராம சேவையாளர் பிரிவுகளில் அண்மையில் (01) நடைபெற்றது.


