“Clean Srilanka ” திட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் தரத்தை பொதுப் போக்குவரத்து சேவையில் வழங்கும் நோக்கில் பதுளை நகரில் தனியார் பஸ்களை சோதனை செய்யும் நடவடிக்கை ஊவா மாகாண பயணிகள் போக்குவரத்து சேவை அதிகார சபையின் தலைவர் சேனக பெர்னாண்டோ தலைமையில் அண்மையில் (01) இடம்பெற்றது.
இதன் போது பஸ்களில் அநாவசியமாகப் பொருத்தப்பட்டுள்ளவைகளை அகற்றுதல் உட்பட பயணிகளுக்கு போக்குவரத்தின் போது ஏற்படும் பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டதாக பதுளை மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்தது.


