மகாவலி குடியேற்றங்களில் வாழும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவையை மேம்படுத்துவதற்காக வேண்டி, மகாவலி C வலயத்தில் உள்ள 10 குளங்களில் 15 இலட்சம் மீன் குஞ்சுகள் இடப்பட்டுள்ளன.
மகாவலி C வலயத்திற்கு அருகாமையில் பூர்வீகக் குடியிருப்பாளர்கள் வசிக்கின்ற ஹெனா நிகல பிரதேசத்தில் உள்ள ஹெனா நிகல குளத்திலும், ரத்கிந்த, அளுயடவல வௌ, பெலன்கஸ் வௌ, பரகஸ் வௌ, உல்பத் வௌ, வீரலந்த வௌ, மல்தெனிய வௌ, மற்றும் காஸன் வௌ ஆகிய குளங்களிலும் இந்த மீன் குஞ்சுகள் இடப்பட்டுள்ளன.
இவ்வாறு இந்த குளங்களில் மீன் குஞ்சுகளை வளர்ப்பதனூடாக, குறித்த பிரதேசத்தை அண்மித்து வாழ்கின்ற மீன்பிடி தொழிவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதும் இதன் ஒரு நோக்கமாகும்.
இதேவேளை, இந்த குளங்களை அண்மித்த பிரதேசஙகளில் சுமார் 687 பேர் மீன்படி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதுடன், சுமார் 3500 பேர் அவர்களில் தங்கி வாழ்கின்றனர்.