மாந்தீவில் தரித்திருந்த ஆறு காட்டு யானைகளும் 9 மணி நேர கடும் பிரயத்தனத்தின் பின்னர் அங்கிருந்து வெளியேற்றம்
9 மணித்தியால பாரிய பிரயத்தனத்தின் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் மாந்தீவு பகுதியில் நீண்ட நாட்களாக சஞ்சரித்திருந்த 6 காட்டு யானைகள் வனப்பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
மட்டக்களப்பு வவுணதீவு பகுதியை அண்டிய மாந்தீவில் தொடர்ச்சியாக சஞ்சரித்து வரும் காட்டு யானைகள் கூட்டத்தினால் அப்பகுதியை அண்டிய திருப்பெருந்துறை, விளாவெட்டுவான், மங்கிக் கட்டு, கன்னன்குடா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களும் விவசாயிகளும் பல்வேறு சிரமத்தினை எதிர்நோக்கி வரும் நிலையில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம் மேற்பார்வையின் கீழ், வன ஜீவராஜிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் ஒன்பது மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்ட பிரயத்தனத்தின் பின்னர் 6 காட்டு யானைகள் வனப்பகுதியை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டன.


