தற்சமயம் புகையிரத ஊழியர்களுடன் இராணுவத்தினர் மற்றும் ஊர் மக்களும் இணைத்து துரிதமாக மீளமைத்து வரும் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மதவாச்சியில் இருந்து தலைமன்னாருக்கு
செல்லும் புகையிரதப்பாதைப் பணிகளை கண்காணிப்பதற்கான விஜயமொன்றை அண்மையில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேற்கொண்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன், பிரதேச செயலாளர், புகையிரத திணைக்கள அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் பிரதேச மக்களும் இதன் போது கலந்துகொண்டனர்.


