மாத்தறை மாவட்டத்தில் உள்ள லேனபட்டுவ குளமானது பல ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இல்லாததால், சிதைவுகள் ஏற்பட்டு நீர் கசிவுகள் ஏற்பட்டது. அத்துடன் குளத்தின் கரை நிலையற்றதாக மாறியது. இதனனால் மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் காணப்பட்டது.
இந்த நிலைமைக்கு நிரந்தர தீர்வாக, விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் மற்றும் மாத்தறை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எல்.எம். அபேவிக்ரம ஆகியோரின் தலைமையில் லேனபட்டுவ குள மறுசீரமைப்பு திட்டம் அண்மையில் (பிப்ரவரி 21) ஆரம்பிக்கப்பட்டது.


