மேலதிக புகையிரதங்களை சேவையில் இணைத்தல்

மேலதிக புகையிரதங்களை சேவையில் இணைத்தல்
  • :

நத்தார் பண்டிகை, பாடசாலை விடுமுறை மற்றும் வருட இறுதி நீண்ட விடுமுறையை முன்னிட்டு பின்வருமாறு மேலதிக புகையிரத சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

2025/12/24 அன்று பி.ப. 03.00 மணிக்கு மருதானையிலிருந்து மாத்தறை வரை விசேட விரைவு புகையிரதமொன்று பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விசேட புகையிரதம் 2025/12/29 அன்று மு.ப. 05.00 மணிக்கு மாத்தறை புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்டு மு.ப. 08.30 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை - காங்கேசன்துறை இடையிலான நகரங்களுக்கு இடையிலானபுகையிரதம் (Intercity) 2025/12/25 மற்றும் 28 ஆகிய திகதிகளில் பயணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. (இந்த புகையிரதம் 09 குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பு பெட்டிகளைக் கொண்டதாகும்.)

Related Articles