இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபையால் ஏற்புடைய அனைத்துப் பங்காளர்களுடன் கலந்துரையாடி, பொருத்தமான காணிகளை அடையாளங் காணல் மற்றும் முன்னுரிமை வழங்கல், மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தி வரைபடம் மற்றும் மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்திப் பூங்காக்களை அபிவிருத்தி செய்வதற்கான நேரச் சட்டகம் போன்ற பிரதான மூன்று (03) துறைகளை உள்ளடக்கிய வகையிலும், மற்றும் மிதக்கும் சூரிய மின்கல மின்னுற்பத்திக் கருத்திட்டங்களையும் உட்சேர்த்தும் தயாரிக்கப்பட்டுள்ள 'மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தி வளங்கள் அபிவிருத்தித் திட்டம் 2025-2030' இற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தொடர்பான தேசியக் கொள்கைக்கமைய, 2030 ஆம் ஆண்டளவில் தேசிய மின்சாரக் கேள்வியில் 70% வீதத்தை மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்களிலிருந்து பூர்த்தி செய்வதற்காகவும், 2050 ஆம் ஆண்டளவில் காபன் வெளியேற்றத்தை குறைப்பதற்காகவும் மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தி வளங்கள் அபிவிருத்தித் திட்டத்தை தயாரிக்க வேண்டியது அவசியமாகும். 2007 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபைச் சட்டத்தின் மூலம் குறித்த திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


