முன்னாள் அமைச்சர் அருக்கட்டு பட்டபெந்திகே ஜகத் புஷ்பகுமார ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.
தென்னை அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சர் அருக்கட்டு பட்டபெந்திகே ஜகத் புஷ்பகுமார, 2026.07.08 அன்று காலை சுமார் 9.20 மணியளவில், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். கைதுடன் தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டுகள் பின்வருமாறு:
1. 2014 ஊவா மாகாண சபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டபோது, அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து பொதுமக்களை விழிப்பூட்டுவதற்காக 250,000 சுவரொட்டிகளையும் துண்டுப்பிரசுரங்களையும் அச்சிடுமாறு சிலாபம் தோட்ட நிறுவனம் மற்றும் குருநாகல் தோட்ட நிறுவனத்திற்கு உத்தரவிட்டு, அந்த நோக்கத்திற்காக அவ்விரு நிறுவனங்களையும் ரூபா. 2,665,000/-.
II. 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வெள்ள நிவாரணமாக சாரம் மற்றும் டி சேர்ட்கள் 5000 சோடிகள் மற்றும் பாவாடை மேலாடை 5000 சோடிகளை விநியோகிப்பதற்காக சிலாபம் தோட்ட நிறுவனம் மற்றும் குருநாகல் தோட்ட நிறுவனம் மூலம் கொள்முதல் செயன்முறைகளுக்கு புறம்பாக கொள்வனவு செய்ததுடன் முறையே அவ்விரு நிறுவனங்களுக்கும் 3,275,000/- மற்றும் 3,075,000/- ஆகிய தொகைகளை நேரடியாக வழங்காமை.
Ⅲ. 2013 மற்றும் 2014 மே தினப் பேரணிகளில் பங்கேற்றவர்களுக்கு, சிலாபம் தோட்ட நிறுவனத்திடமிருந்து தலா 2000 டி-சேர்ட்கள் மற்றும் 1500 சாரிகளையும், குருநாகல் தோட்ட நிறுவனத்திடமிருந்து தலா 2000 டி-சேர்ட்கள் மற்றும் 1500 சாரிகளையும் வழங்குமாறு அதிகாரிகளைத் தூண்டியமை.
கைது செய்யப்பட்ட மேற்படி சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்


