தேசிய பேரழிவாக மாறியுள்ள நச்சு போதைப்பொருட்களின் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட “முழு நாடும் ஒன்றாக” தேசிய திட்டத்தின் வட மாகாண நிகழ்ச்சித் திட்டம் நாளை (16) மாலை யாழ்ப்பாண தொழில்நுட்பக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறும்.
“முழு நாடும் ஒன்றாக” தேசிய திட்டத்தில் ஆரம்ப நிகழ்ச்சித் திட்டம் 2025 அக்டோபர் 30 அன்று கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது, அதே நேரத்தில் அதன் தென் மாகாண நிகழ்ச்சித் திட்டம் 2025 நவம்பர் 20 அன்று தங்காலையில் நடைபெற்றது.
நச்சு போதைப்பொருட்களின் அச்சுறுத்தலை ஒழிப்பதன் அவசியம் குறித்து வட மாகாண மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், “முழு நாடும் ஒன்றாக” தேசிய திட்டத்தின் தனித்துவமான பங்கை தெளிவுபடுத்துவதன் மூலம் வட மாகாண மக்கள் மற்றும் இந்த திட்டத்திற்கு தொடர்புடைய அனைத்து தரப்பினரின் நேர்மறையான பங்களிப்பைப் பெறுவதே நாளை நடைபெறும் வட மாகாண நிகழ்ச்சித் திட்டத்தின் எதிர்பார்ப்பாகும்.


