நாளை (19) முதல் ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்
டி.ஜே.ஏ.எஸ். தி ஏஸ். ராஜகருணா தெரிவித்துள்ளார்.
குறித்த திகதி ஒற்றை எண்ணாக இருந்தால் அன்றைய தினம், வாகன எண் தகட்டின் கடைசி ஒலக்கம் ஒற்றை எண் உள்ளவர்கள் மாத்திரமே எரிபொருட்களை பெற்றுக்கொள்ள முடியும். அதேவேளை, இரட்டை தினம் உள்ள நாட்களில் வாகன எண் தகட்டின் கடைசி ஒலக்கம் இரட்டை எண்ணாகவோ அல்லது பூச்சியமாகவோ (0) இருந்தால் மாத்திரமே எரிபொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, நாளை ஒற்றை எண் (1, 3, 5, 7, 9) உள்ளவர்கள் மட்டுமே எரிபொருட்களை பெற்றுக்கொள்ள முடியும்.
கட்டாயமாக, உங்களிடம் ஏதேனும் ஒரு வழியில் QR குறியீடு இருக்க வேண்டும்.
உங்களிடம் QR குறியீடு இருந்து, உங்கள் வாகன தகட்டின் கடைசி எண் 1, 3, 5, 7, 9 ஆக இருந்தால், நீங்கள் நாளை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் எரிபொருட்களை பெற்றுக்கொள்ள முடியும்.
அத்துடன், நாளை மறுநாள் (20), இரட்டை இலக்கம் அல்லது பூச்சியத்தில் (0) முடியும் வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டி உள்ளார்.


