நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

  • :

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

2025 ஒக்டோபர் 26ஆம் திகதி பிற்பகல் 02.00 மணிக்கு வெளியிடப்பட்டது.

 

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கமானது கடந்த 6 மணித்தியாலங்களில் மணித்தியாலத்துக்கு 10 கிலோ மீற்றர் வேகத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்து, இன்று ஒக்டோபர் 26ஆம் திகதி முற்பகல் 0530 மணிக்கு அதே பிராந்தியத்திற்கு மேலாக வட அகலாங்கு 11.10N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 87.20E இடையில் திருகோணமலைக்கு வடகிழக்காக சுமார் 720 கிலோ மீற்றர் தூரத்தில் மையம் கொண்டிருந்தது.

 

இத் தொகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், அடுத்த 24 மணித்தியாலங்களில் தென்மேற்கு மற்றும் அண்மையாகவுள்ள மேற்கு - மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு சூறாவளியாக வலுவடையக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதுடன், ஒக்டோபர் 28ஆம் திகதியளவில் ஒரு பாரிய சூறாவளியாகவும் வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தொடர்ந்தும் வடக்கு - வடமேற்கு திசையில் நகரக் கூடிய அத் தொகுதி ஒக்டோபர் 28ஆம் திகதி ஆந்திரப் பிரதேசக் கரையை ஒரு பாரிய சூறாவளியாகக் கடக்கக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.

 

வட அகலாங்குகள் 05N - 15N இற்கும் கிழக்கு நெடுங்கோடுகள் 80E – 95E இற்கும் இடையில் உள்ள ஆழம் கூடிய கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள். இக் கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் பாதுகாப்பான பிரதேசத்திற்கு நகருமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 

காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

 

மழை நிலைமை:

திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை, மன்னார் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

 

காற்று :

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு திசையிலிருந்து வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன், காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

 

கடல் நிலை:

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன், அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளி

ப்பாகவும் காணப்படும்.

Related Articles