நாட்டில் சிறிய மற்றும் நடுத்தரளவுக் கைத்தொழில் அபிவிருத்தி தொடர்பாக ஆசிய உற்பத்தித் திறன் அமைப்பு பாராட்டு......

நாட்டில் சிறிய மற்றும் நடுத்தரளவுக் கைத்தொழில் அபிவிருத்தி தொடர்பாக ஆசிய உற்பத்தித் திறன் அமைப்பு பாராட்டு......
  • :

 

இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தரளவுக் கைத்தொழிலாளர்களை முன்னேற்றுவதற்காக கைத்தொழில் அமைச்சு மேற்கொள்ளும் திட்டங்கள் தொடர்பாக மிகவும் மகிழ்ச்சி அடைவதாக ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் பொதுச் செயலாளர் கலாநிதி இந்திரா பிரதான சிங்கவிந்த ( Indra Pradhana Singawinta) தெரிவித்தார். 

அண்மையில் நாட்டிற்கு வருகை தந்த ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் பொதுச் செயலாளர் சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில் முயற்சியாளார்களை வலுப்படுத்தும் நோக்கில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சினால் செயற்படுத்தப்படும் “FOUR I” திட்டத்தின் கம்பஹா மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்னோடி திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாகக் கண்டறிவதற்காக கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Related Articles