நாட்டில் சுகாதார சேவை குறிகாட்டிகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால இலக்குகளை அடைவது சம்பந்தமாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சகத்தின் செயலாளரிடமிருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
தேசிய சுகாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்துதல் மற்றும் தேசிய சுகாதார திட்டத்தை செயல்படுத்துதல் மூலம் 2030 ஆம் ஆண்டுக்குள் 80% சேவை பாதுகாப்பு இலக்கை அடைய முடியும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய சுகாதார பாதுகாப்பு மற்றும் உலக சுகாதார அமைப்பு - உலக வங்கி 2025 உலகளாவிய கண்காணிப்பு அறிக்கைகள் தொடர்பாக விசேட அறிக்கையை வெளியிட்டதன் மூலம் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் இந்த விடயங்களை தெரிவித்து உள்ளார்.
நாட்டின் சுகாதார சேவையின் தவறான விளக்கங்கள், தவறான புள்ளிவிவரங்கள் ஆகியவற்றை மேற்கோள் காட்டி சமூக ஊடகங்கள் உட்பட மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் பல்வேறு செய்திகள் பரப்பப்பட்டுள்ளன.
அந்த தவறான மற்றும் திரிபுபடுத்தப்பட்ட செய்திகள் நாட்டின் சுகாதார சேவை மிகவும் கீழ் மட்டத்தை எட்டியுள்ளது என்று கூற முற்பட்டன.
இத்தகைய சூழ்நிலையில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர், டாக்டர் அனில் ஜாசிங்க, நாட்டின் சுகாதார சேவை குறிகாட்டிகளின் முன்னேற்றம் குறித்து துல்லியமான புள்ளி விபர அடிப்படையில் எதிர்கால இலக்குகளை அடைவது குறித்து இந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளார்.
தேசிய சுகாதாரக் கொள்கை (UHC) அனைத்து மக்களுக்கும் நிதி நெருக்கடி இல்லாமல் சிறந்த சுகாதார சேவையை கிடைக்கபெறவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு - உலக வங்கி 2025 உலகளாவிய சுகாதார பாதுகாப்பு குறித்த உலகளாவிய கண்காணிப்பு அறிக்கையானது (UHC), இந்த இலக்கை நோக்கிய முன்னேற்றம் சேவை பாதுகாப்பு குறியீடு (SCI) மூலம் மதிப்பிடுகிறது. இது மக்களுக்கு அத்தியாவசிய சுகாதார சேவைகளை எந்த அளவிற்கு அணுக முடியும் என்பதைப் பிரதிபலிக்கிறது.
அறிக்கையின்படி, இலங்கையில் 72% (2023) (SDHC UHC குறியீடு 3.8.1) என்ற சிறந்த எண்ணிக்கையிலும் UHC குறியீடு உள்ளது, இது 2019 இல் 67.4% இலிருந்து குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும்.


