நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு நாளையதினம் (02) பாராளுமன்றம் கூடாது – பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானம் 

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு நாளையதினம் (02) பாராளுமன்றம் கூடாது – பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானம் 
  • :

🔸 டிசம்பர் 03 மற்றும் 05ஆம் திகதிகளில் கூடவும் தீர்மானம் 

🔸 இன்று (01) பாராளுமன்ற அமர்வு மு.ப 11.00 மணியுடன் நிறைவு 

நாட்டில் தற்பொழுது காணப்படும் அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு நாளையதினம் (02) பாராளுமன்றத்தைக் கூட்டாதிருப்பதற்கும், நாளைமறுதினம் (03) மற்றும் 5ஆம் திகதி ஆகிய தினங்களில் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். 

 

கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய அவர்களின் பங்குபற்றலுடன் இன்று (01) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டது. 

 

அத்துடன், இன்று பாராளுமன்ற அமர்வை பி.ப 12.30 மணியுடன் மட்டுப்படுத்தி, அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகளை பி.ப 12.30 மணிக்கு நிறைவேற்றுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. எனினும் இது தொடர்பில் தமது எதிர்ப்பினைப் பதிவுசெய்யுமாறு எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.  இருந்தபோதும் இன்றையதினம் பாராளுமன்றத்தின் அமர்வுகள் மு.ப 11.00 மணியுடன் முடிவுக்கு வந்ததுடன், டிசம்பர் 03ஆம் திகதி மு.ப 9.00 மணிக்கு மீண்டும் பாராளுமன்றம் கூடவுள்ளது. 

 

Related Articles