இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யும்போது மோசடியொன்று இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்ற கணக்காய்வு அறிக்கை மற்றும் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் தற்போது பரபரப்பை ஏற்படுத்துியுள்ளது.
இதற்கமைய, 2009 ஆம் ஆண்டு முதல் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தொடர்பாக முறையான விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் செயலாளர் இன்று (11) காலை குற்றவியல் விசாரணைத் திணைக்களத்திற்கு முறைப்பாடொன்றை சமர்ப்பித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை விடுத்துள்ளது.


