நீர்கொழும்பு டிப்போவில் நிறுத்தப்பட்டிருந்த பஸ் வண்டிகளை மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவதற்கு புனரமைப்புத் திட்டம்
கம்பஹா பிரதேசத்திற்கு உட்பட்ட நீர்கொழும்பு டிப்போவில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்களை மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவதற்காக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரட்ண, புனரமைப்பு திட்டத்தின் கீழ், டிப்போவில் நிறுத்தப்பட்டுள்ள பஸ்களை மீண்டும் பயன்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கம்பஹா பிராந்தியத்தில் உள்ள நீர்கொழும்பு டிப்போவிற்கு ஆய்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, தலைவர் சமீபத்தில் குறித்த பிரச்சினையில் கவனம் செலுத்தினார்.
டிப்போ பொறியியல் துறை, பணியாளர் வசதிகள், பஸ் செயல்பாடுகள் மற்றும் பிற அம்சங்களில் உள்ள குறைபாடுகளையும் அவர் மேலும் ஆராய்ந்தார்.
அப்போது அங்கு இருந்த டிப்போவின் அனைத்து ஊழியர்களுடனும் தலைவர் சுமுகமான உரையாடலில் ஈடுபட்டார்.


