நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை
29ஆம் திகதி இரவு 11.30 மணி வரை இந்த சிவப்பு எச்சரிக்கை அமுலில் இருக்கும் என்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, மகாவலி கங்கை, தெதுரு ஓயா, கலா ஓயா, மகா ஓயா, மாணிக்க கங்கை, மல்வத்து ஓயா ஆகிய ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து அங்கு பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதனால் இந்த பிரதேசங்களுக்கு அண்மையில் இருக்கின்ற மக்களும் தாழ் நிலப் பிரதேசங்களில் வசிக்கின்ற மக்களும் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


