ஒழுக்க நெறிக் கோவை” வகுத்தல் தொடர்பாக உள் விவகாரப் பிரிவுகளுக்கான செயலமர்வு

ஒழுக்க நெறிக் கோவை” வகுத்தல் தொடர்பாக உள் விவகாரப் பிரிவுகளுக்கான செயலமர்வு
  • :
 
ஒழுக்க நெறிக் கோவையை உருவாக்குவது தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உள் விவகாரப் பிரிவுகளுக்கான (IAUs) செயலமர்வு இன்று (26) அலரி மாளிகையில் நடைபெற்றது.

 'நேர்மையான தேசத்தை நோக்கி' என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த செயலமர்வில் உரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, அரச ஊழியர்களிடையே நேர்மையை பேண ஒவ்வொரு அரச நிறுவனத்திலும் உள் விவகார அலகுகள் நிறுவப்படும் என்று தெரிவித்தார்.

முதல் கட்டத்தின் கீழ், 107 அரச நிறுவனங்களில் உள் விவகார அலகுகள் நிறுவப்பட்டுள்ளன என்றும், இரண்டாம் கட்டத்தின் கீழ் மேலும் 250 அரச நிறுவனங்களில் உள் விவகார அலகுகளை நிறுவுவதற்கான சுற்றறிக்கை அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன என்றும் செயலாளர் தெரிவித்தார்.
 
இந்தப் பிரிவுகளை நிறுவுவதும், அரச ஊழியர்களுக்கான ஒழுக்க நெறிக் கோவையை வகுப்பதும் நிர்வாக நடவடிக்கைகளை எளிதாக்கும் என்று ஜனாதிபதியின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சந்திமா விக்ரமசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் பிரசன்ன சந்தித், நிறுவனங்களின் பணிப்பாளர் நாயகம் சந்தன குமாரசிங்க, சர்வோதய அபிவிருத்தி நிதி நிறுவனத்தின் நிறைவேற்றுத்தரம் சாரா சுயாதீன பணிப்பாளர் நந்திக புத்திபால ஆகியோரும் இந்நிகழ்வில் உரைகளை நிகழ்த்தினர்.

Related Articles