ஒற்றை சூப்பர் பொஸ்பேட் உரத் தொழிற்சாலையை நிர்மாணிப்பதற்காக முன்மொழியப்பட்ட இடம் கைத்தொழில் அமைச்சரின் கண்காணிப்பிற்கு

ஒற்றை சூப்பர் பொஸ்பேட் உரத் தொழிற்சாலையை நிர்மாணிப்பதற்காக முன்மொழியப்பட்ட இடம் கைத்தொழில் அமைச்சரின் கண்காணிப்பிற்கு
  • :
ஒற்றை சூப்பர் பொஸ்பேட் (SSP) உரத் தொழிற்சாலையை நிருமாணிப்பதற்கு திருகோணமலை சீனக் குடா துறைமுகத்திற்கு அருகில் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான காணியை மேற்பார்வை செய்வதற்கு கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி நேற்று (15) சென்றதுடன், அப்பகுதியை அண்மித்த உட்கட்டமைப்பு வசதிகளின் முன்னேற்றத்திற்காக திருகோணமலை மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டார்.

 முதலீட்டாளர்களின் விருப்பங்களைக் கோரல், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சினால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அந்த விருப்பங்களை கோரும் செயற்பாடு இம்மாதம் 16(இன்று) பிற்பகல் 2 மணியுடன் நிறைவடைகின்றது.

தற்போது அதிகளவிலான முதலீட்டாளர்கள் தமது விருப்பங்களை அமைச்சுக்கு சமர்ப்பித்துள்ளார்கள்.

Related Articles