கனமழை காரணமாக பாணம பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை 2025 மார்ச் 03 அன்று, ஆரம்பிக்கப்பட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம், இராணுவம் மற்றும் பொலிஸ் உள்ளிட்ட தரப்பினரின் பங்களிப்புடன் நடவடிக்கைகள் நடைப்பெறுகின்றன.
அதன்படி, அம்பாறை மாவட்டத்தின் பாணம பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அப்பகுதி பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதன்படி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தென்கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களின் பங்களிப்புடன், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் இராணுவம் உட்பட ஏனைய தரப்பினரின் ஒத்துழைப்புடன், உணவு மற்றும் நீர் விநியோகம் உள்ளிட்ட மக்களை கொண்டு செல்வது உள்ளிட்ட அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு கடற்படையினர் தொடர்ந்து பங்களிப்பு வழங்கி வருகின்றனர்.
மேலும், 2025 மார்ச் 3 அன்று, 178 பேரை பத்திரமாக ஏற்றிச் செல்ல கடற்படையினர் ஏனைய தரப்பினருடன் இணைந்து செயற்பட்டனர்.