பங்களாதேஷ் சுதந்திர மற்றும் தேசிய தினத்தின் 55வது ஆண்டு விழாவில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

பங்களாதேஷ் சுதந்திர மற்றும் தேசிய தினத்தின் 55வது ஆண்டு விழாவில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு
  • :

இலங்கையில் உள்ள பங்களாதேஷ் மக்கள் குடியரசின் உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் நேற்று மாலை (26 மார்ச்) கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்ற , பங்களாதேஷ் சுதந்திர மற்றும் தேசிய தினத்தின் 55வது ஆண்டு நிறைவின் வரவேற்பு விழாவில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சர் கௌரவ நளிந்த ஜயதிஸ்ஸ இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அதிமேதகு அன்தாலிப் எல்யாஸ் (Andalib Elias) மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் எம் . மொனீருஸ்ஸமான் (M. Moniruzzaman) நிகழ்விற்கு வருகை தந்த அதிதிகளை வரவேற்றனர். உயர்ஸ்தானிகர் தனது உரையில், பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கு இடையிலான நிலையான இருதரப்பு உறவுகளை வலியுறுத்தி, ஆழமான வரலாற்றுப் பின்னணியும் நவீன கால ராஜதந்திர ஒத்துழைப்பின் வளர்ச்சியையும் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர்கள், பிரதி அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், முப்படை தளபதிகள், உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

Related Articles