பண்டிகை காலம் மற்றும் வருட இறுதி விடுமுறைக்கான சிறப்பு பேருந்து சேவைத் திட்டம் -இலங்கை போக்குவரத்து சபை

பண்டிகை காலம் மற்றும் வருட இறுதி விடுமுறைக்கான சிறப்பு பேருந்து சேவைத் திட்டம் -இலங்கை போக்குவரத்து சபை
  • :

இன்று (24) முதல் 27 ஆம் திகதி வரை தற்போதைய அட்டவணைக்கு மேலதிகமாக பல விசேட பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன தெரிவித்தார்.

இன்று (24) கொழும்பிலிருந்து கம்பஹா, களுத்துறை, ருஹுணு, ஊவா, கண்டி, நுவரெலியா, ரஜரட்ட, கிழக்கு, வடமேற்கு, சப்ரகமுவா மற்றும் வடக்கு ஆகிய பிரதேசங்களுக்கு 107 மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 25 ஆம் திகதி 75 மேலதிக பேருந்துகளும், 26 ஆம் திகதி 60 பேருந்துகளும், 27 ஆம் திகதி 52 பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று தலைவர் குறிப்பிட்டார்.

ஏதேனும் மேலதிக தகவல்கள் மற்றும் அறிவிப்புகளுக்கு இலங்கை போக்குவரத்து சபையை 1958 என்ற ஹாட்லைன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles