பாறை சரிவு காரணமாக கேகாலை கீழ் கடுகன்னாவ வீதி மூடப்பட்டுள்ளது - மாற்று வழிகளை பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை

பாறை சரிவு காரணமாக கேகாலை கீழ் கடுகன்னாவ வீதி மூடப்பட்டுள்ளது - மாற்று வழிகளை பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை
  • :

கேகாலை மாவட்டத்தின் கீழ் கடுகன்னாவ பிரதேசத்தில் நேற்று (22) இடம்பெற்ற சம்பவத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலைமை காரணமாக, கீழ் கடுகன்னாவ வீதி மூடப்பட்டுள்ளதால், கணேதந்த மஹாந்தேகம ஊடாக கண்டி நோக்கிய பாதையையும், மாவனெல்ல ஹெம்மாதகம மற்றும் மாவனெல்ல ஹத்ராலியத்த வீதி ஊடாக கண்டி நோக்கிய பாதையையும் மாற்றுப் பாதையாகப் பயன்படுத்த முடியும் எனவும் மத்திய நிலையம் அறிவித்துள்ளது..

இதேவேளை, மாத்தளை மாவட்டத்தின் வட்டகொட வீதியின், கல்வலக்கு அருகாமையில் உள்ள பாதையும் நேற்று (22) ஏற்பட்ட பாறை சரிவு காரணமாக முற்றாக தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் இணைந்து நிலைமையை சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், ஜிங் கங்கை, நில்வலா கங்கைப் படுகை மற்றும் களுகங்கை மற்றும் சிறிய கங்கையின் உப குளங்களுக்கு நீர்ப்பாசன திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை அறிவிப்பு மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த நதிகளின் இரு கரைகளிலும் உள்ள மக்கள் தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானம் செலுத்துவது மிகவும் அவசியமானது என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

Related Articles